மாஸ்டர் மகேந்திரனின் 'அமிகோ கேரேஜ்' திரைப்படம் இம்மாதம் 15-ம் தேதி வெளியாகிறது

அறிமுக இயக்குநரான பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் அமிகோ கேரேஜ் என்ற படத்தில் மகேந்திரன் நடித்து வந்தார்.இப்படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி அதிரா ராஜ் நடித்திருக்கிறார்.
மாஸ்டர் மகேந்திரனின் 'அமிகோ கேரேஜ்' திரைப்படம் இம்மாதம் 15-ம் தேதி வெளியாகிறது
Published on

மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நமக்கு அறிமுகமானவர். தற்போது கதாநாயகனாக பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அண்மையில் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடித்த லேபிள் வெப் சீரியசில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து, அறிமுக இயக்குநரான பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் 'அமிகோ கேரேஜ்' என்ற படத்தில் மகேந்திரன் நடித்து வந்தார். மகேந்திரனின் நடிப்புப் பயணத்தில் அமிகோ கேரேஜ் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் படக்குழு கூறுகிறது.

இந்தப் படம் கேங்ஸ்டர் இளைஞரின் வாழ்க்கையை கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்ல முற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி அதிரா ராஜ் நடித்திருக்கிறார்.

அமிகோ கேரேஜ் திரைப்படத்தை பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பாக முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் இம்மாதம் 15-ம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் அறிண்டம், அர்த்தம், கரா, ரப்பப்பரி ஆகிய படங்களில் மகேந்திரன் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வர காத்திருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com