சினிமா

ரஜினியை மறைமுகமாக தாக்கிய பாரதிராஜா

Published On 2018-04-30 09:19 GMT   |   Update On 2018-04-30 09:19 GMT
கெட்டப்பய சார் இந்த காளி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் பாரதிராஜா, நடிகர் ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். #Rajini #Bharathiraja
‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கியவர் பாடலாசிரியர் யுரேகா. தற்போது இவர் இயக்கி வரும் படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’. இந்தப் படத்தில் ஜெய்வந்த், ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, அபிஷேக் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்தின் நாயகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஐரா அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பேசும்போது, ‘பொதுவாக படத்தின் தலைப்பு வைப்பதில் எனக்கு உடன் பாடில்லை. குறிப்பாக இந்த படத்தின் தலைப்பு ‘கெட்டப்பய சார் இந்த காளி’ என்று வைத்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் தலைப்பு வைத்து நடிகர்களை நாம் தூக்கி விடுகிறோம்.

அப்படி பண்ணு, இப்படி பண்ணு என்று சொல்லி விடுகிறோம். நாம் எழுதி கொடுத்த வசனத்தை படித்து, பாடல்களை பாடி, நாளை நாட்டை ஆளுகிறேன் என்று வந்து நிக்கிறான். அவர்களை எல்லாம் அப்போவே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். ரசிகர்களையும் முட்டாளாக்கி இருக்கிறார்கள்.

கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என அவர்களையும் அப்போதே தடுத்திருக்க வேண்டும். அவர்களை தடுக்காததால் ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு நாட்டை ஆளப்போவதாக சொல்லி வருகிறார்கள். எல்லாம் நாம் செய்த தவறுதான்.

இப்படத்தின் இயக்குனர் யுரேகா முந்தைய படைப்புகளை பார்த்திருக்கிறேன். சினிமா உலகிற்கு வந்தோமா போனோமா என்று இல்லாமல், எதாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.
Tags:    

Similar News