சினிமா

என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி

Published On 2018-04-27 05:19 GMT   |   Update On 2018-04-27 05:19 GMT
வில்லன், நகைச்சுவை என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் மைம் கோபி, அவரது வாழ்கையில் இழந்த மிகப்பெரிய இழப்பாக `செயல்' படத்தில் நடிக்க முடியாமல் போனது தான் என்று கூறியிருக்கிறார். #MimeGopi
தமிழ் சினிமாவில் வித்தாசமான கதாபாத்திரத்திர நடித்து பிரபலமாகியிருப்பவர் நடிகர் மைம் கோபி. வில்லன், நகைச்சுவை நடிகர் என சுமார் 40 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் மைம் கோபி செயல் படத்தில் வந்த வாய்ப்பை தவறவிட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது..

பிரசன்னா நடிப்பில் மாரிமுத்து இயக்கத்தில் உருவான `கண்ணும் கண்ணும்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். அதைத் தொடர்ந்து மெட்ராஸ், மாரி, கபாலி, மாயா, கெத்து, பைரவா, உறியடி, கதகளி, மதுரைவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.

வளர்ந்து வரும் நடிகனான எனக்கு, எனது வாழ்கையில் நான் இழந்த மிகப்பெரிய இழப்பாக நினைப்பது `செயல்' படத்தில் நடிக்க முடியாமல் போனது தான்.

செயல் படத்தில் தண்டபாணி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னிடம் பேசினார்கள். அருமையான வேடம் அது, ஆனால் அவர்கள் சொன்ன தேதியில் நான் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் நடிக்க முடியாமல் போனது, அதற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்தேன்.



படம் ரெடியாகி ரிலீசுக்கு தயாராக உள்ளதை தெரிந்து கொண்டு நான் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் கேட்டு, படத்தை பார்த்தேன். நான் தவறவிட்ட அந்த கதாபாத்திரம் மிக மிக அருமையான வந்திருந்தது. 

நான் நடிக்க முடியாமல் போன அந்த கேரக்டரில், சந்திரன் என்பவர் நடித்திருந்தார். அவரும் சிறப்பாக நடித்திருந்தார், இருந்தாலும் நான் தவறவிட்ட மிகபெரிய வாய்ப்பு இது.

எல்லா படத்திலும் ஹீரோவுக்குதான் அறிமுகம் பில்டப்பாக இருக்கும், ஆனால் இந்த படத்தில் மாறுபட்டு வில்லன்னுக்கு தான் பில்டப் அதிகமாக இருந்தது. அதனால் இனி எந்த வாய்ப்பும் என் கைநழுவி போகாமல் கவனமாக பார்த்துக் கொள்வேன் என்றார். #MimeGopi 
Tags:    

Similar News