சினிமா

கடைக்குட்டி சிங்கம் படத்தின் முக்கிய அப்டேட்

Published On 2018-04-23 14:06 GMT   |   Update On 2018-04-23 14:06 GMT
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் முக்கிய அப்டேட். #KadaikuttySingam #Karthi
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்'. இதில், கார்த்தி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், சவுந்தரராஜா, பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். 

இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு பாண்டிராஜ் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியது. பட அதிபர்கள் நடத்தி வந்த ஸ்டிரைக்கால் இறுதிகட்ட படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது.



தற்போது ஸ்டிரைக் முடிந்துள்ளதால், இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர். இறுதி நாளான இன்று கேக் வெட்டி படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். விரைவில் படத்தின் பின்னணி வேலைகளை தொடங்க இருக்கிறார்கள்.
Tags:    

Similar News