சினிமா

நயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் சாந்தினி

Published On 2018-04-23 12:19 GMT   |   Update On 2018-04-23 12:19 GMT
சித்து +2 படம் மூலம் அறிமுகமான நடிகை சாந்தினி, அடுத்ததாக நடிகைகள் நயன்தாரா, திரிஷா ஆகியோரின் வழியை பின்பற்றி நடிக்க இருக்கிறார்.
சினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும். மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்.

அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் திரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி..! ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். 



இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர். தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி, ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ், மலையாள படக்களை தயாரித்தவர். தற்சமயம் இருவரும் பிரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் ரெசார்ட் அண்ட் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார்கள்.

ஹாரர் திரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எழுத்து & இணை இயக்கம்: சந்தோஷ் மேனன். 



இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது சாந்தினியும் இணைந்திருக்கிறார். 
Tags:    

Similar News