சினிமா

விஜய் படத்தில் கீர்த்தி சுரேஷின் அப்பா இவரா?

Published On 2018-04-19 15:19 GMT   |   Update On 2018-04-19 15:19 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அப்பாவாக நடிப்பவர் யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘விஜய் 62’ படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ராதாரவி, பழ கருப்பையா, தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இவர்கள் கூட்டணியில் நடிகர் லிவிங்ஸ்டன் இணைந்துள்ளார். இவர் கீர்த்தி சுரேஷின் அப்பாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 



சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 
Tags:    

Similar News