சினிமா

தியேட்டர் அதிபர்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை

Published On 2018-04-12 05:17 GMT   |   Update On 2018-04-12 05:17 GMT
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களையும் நேரடியாக சந்தித்து தற்போதைய சூழ்நிலை குறித்து இன்று விவாதிக்க உள்ளது.
திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்கும்படி படஅதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர். சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறைவான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், பார்க்கிங் கட்டணம், கேண்டீன் உணவு பொருள் விலையை குறைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இந்த கோரிக்கை குறித்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும், படஅதிபர்களுக்கும் ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்து விட்டன.

இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்களை இன்று நேரடியாக சந்தித்து பேச தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களையும் நேரடியாக சந்தித்து தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக 12-ந்தேதி (இன்று) மாலை 5 மணிக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ் நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News