சினிமா

பாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி

Published On 2018-03-28 10:58 GMT   |   Update On 2018-03-28 10:58 GMT
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்ற பாகுபலி படம் அடுத்ததாக பாகிஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. #Baahubali #PIFF
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் - ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் ராஜமவுலி இந்தியாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராகவும் மாறிவிட்டார். இந்த படத்தில் நாயகனாக நடித்த பிரபாஸீம் இந்திய அளவில் பிரபலமானார். 

இரண்டு பாகங்களாக உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீஸிலும் சக்கை போடு போட்டது. பாகுபலி முதல் பாகம் ரூ.650 கோடியும், பாகுபலி 2 சுமார் ரூ.1800 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. 

ஏற்கனவே பாகுபலி படத்தின் இரு பாகங்களும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், அடுத்ததாக பாகிஸ்தானிலும் திரையிடப்பட இருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் ராஜமவுலி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 



பாகுபலி படத்தின் மூலம் பல நாடுகளுக்கு பயணிக்கும் வாய்ப்பு கிதை்துவிட்டது. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு செல்ல இருக்கிறோம். என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வருகிற மார்ச் 29-ஆம் தேதி முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை பாகிஸ்தான் சர்வதேச திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் பாகுபலி-2 படமும் திரையிடப்பட இருக்கிறது. #Baahubali #RajaMouli #PIFF

Tags:    

Similar News