சினிமா

அசுரவதத்திற்கு துணை நிற்கும் கவுதம் மேனன்

Published On 2018-03-06 15:47 GMT   |   Update On 2018-03-06 15:47 GMT
இயக்குனர் கவுதம் மேனன், சசிகுமார் - நந்திதா நடிப்பில் மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அசுரவதம்’ படத்திற்கு துணை நிற்கிறார். #Asuravadham
‘கொடிவீரன்’ படத்திற்கு பிறகு சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அசுரவதம்’. இப்படத்தை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ புகழ் எம்.மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்து வருகிறார். சமீபத்தில், இதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை நாளை மாலை 7 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள். இந்த டீசரை இயக்குனர் கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார். 



தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 
Tags:    

Similar News