சினிமா

சினிமாவில் என்னை கவர்ந்தவர் எம்.ஜி.ஆர் தான்: ரன்வீர் சிங்

Published On 2018-02-05 05:31 GMT   |   Update On 2018-02-05 05:31 GMT
சினிமாவில் என்னை கவர்ந்தவர் எம்.ஜி.ஆர் என்று இந்தி நடிகர் ரன்வீர் சிங் கூறியுள்ளார்.
சினிமாவில் என்னை கவர்ந்தவர் எம்.ஜி.ஆர் என்று இந்தி நடிகர் ரன்வீர் சிங் கூறினார். இவர் சர்ச்சைக்குரிய ‘பத்மாவத்’ படத்தில் அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ரன்வீர் சிங் கூறியதாவது:-

“சினிமாவில் கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவரது ரசிகர்களும் அப்படியே இருந்தார்கள். மது, புகை பிடிக்கும் பழக்கம் அவருக்கு கிடையாது. சினிமாவிலும் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மறுத்தார். தவறான காட்சிகளில் நடித்தால் அது ரசிகர்களை பாதிக்கும் என்றும் அவர்களும் தீய பழக்கங்களுக்கு ஆளாகி விடுவார்கள் என்றும் நம்பினார்.

அதனால்தான் அப்படி நடிப்பதை அவர் தவிர்த்தார். நிஜ வாழ்க்கையில் மட்டுமன்றி சினிமாவிலும் அவர்தான் ஹீரோ. ஒரு படத்தில் ஓட்டலில் உணவு சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் செல்ல வேண்டிய காட்சியில் கூட அவர் நடிக்க மறுத்ததாக கேள்விப் பட்டேன். படங்களில் மக்களுக்கு நல்ல அறிவுரைகள் சொன்னார். வாழ்க்கையிலும் அதை கடைபிடித்தார்.



அதனால்தான் ரசிகர்கள் அவரை கொண்டாடினார்கள். இப்போதைய நடிகர்களுக்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கிறது. எம்.ஜி.ஆரை போலவே நானும் மது அருந்தும் காட்சிகளில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளேன். சமீபத்தில் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி படத்தை இந்தியில் தயாரிக்கப்போவதாகவும் அதில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் சிலர் என்னை அணுகினர்.

அந்த படத்தை நான் பார்த்தேன். அதில் கதாநாயகன் எப்போதும் மது குடித்து போதையில் இருப்பது போன்று காட்சிகள் இருந்தன. நான் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன்.”

Tags:    

Similar News