சினிமா

400 திரையரங்குகளில் வெளியாகும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

Published On 2018-01-30 08:52 GMT   |   Update On 2018-01-30 08:51 GMT
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் திரையரங்குகள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக், காயத்ரி, நிகாரிகா கொனிதலா நடிப்பில் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், டேனியல் அனி போப், ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருக்கிறார். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த படத்தை '7c's என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்' தயாரித்துள்ளது. 'கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம்' இந்த படத்தை சுமார் 400 திரையரங்குகளில் வெளியிடுகிறது. 

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் நிறுவனரான வி.சத்யமூர்த்தி கூறும்போது, விஜய்சேதுபதி - கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள  'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை தமிழகமெங்கும் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில், வருகின்ற பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியாகிறது. 



"இது வரை நான் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு விஜய் சேதுபதி சார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி, விஜய்சேதுபதி - கவுதம் கார்த்திக்கின் இந்த புதிய கூட்டணி நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று முழுமையாக நம்புகிறேன். `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதிக்க இருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை 'மினிமம் காரண்ட்டி' முறையில் வாங்கி இருப்பது பெருமையாக இருக்கின்றது. வருகின்ற பிப்ரவரி 2-ஆம் தேதி அனைவருக்கும் நல்ல நாளாக இருக்கும்..." என்று நம்புகிறேன் என்றார். 


Tags:    

Similar News