சினிமா

எம்.ஜி.ஆர். திரைப்படத்தை துவக்கி வைக்கும் ரஜினி

Published On 2018-01-17 10:06 GMT   |   Update On 2018-01-17 10:06 GMT
எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாளான இன்று அவரது கனவை நினைவாக்கும் வகையில் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற திரைப்படத்தை நடிகர் ரஜினி துவக்கி வைக்கிறார். #MGR101 #KizhakkuAfricaVilRaju
‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியாகும் போது, எம்.ஜி.ஆர். அந்த படத்தின் இறுதியில் அடுத்ததாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தை உருவாக்க இருக்கிறேன் என்று அறிவித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் இப்படம் உருவாக வில்லை. இந்நிலையில், இப்படத்தை அனிமேஷன் முறையில் உருவாக்க இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த துவக்க விழாவில், எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள், கழக தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொள்கிறார்கள். நடிகர்  ரஜினிகாந்த் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, படத்தை துவக்கி வைக்கிறார்.



எம்.அருள் மூர்த்தி இயக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். பிரபுதேவா மற்றும் கணேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். அடுத்த வருடம் இதே நாளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
Tags:    

Similar News