சினிமா

வேலைக்காரன் படத்தில் நான் ஹீரோ இல்லை: சிவகார்த்திகேயன்

Published On 2017-12-21 16:26 GMT   |   Update On 2017-12-21 16:26 GMT
மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வேலைக்காரன் படத்தில் நான் ஹீரோ இல்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில், '24 ஏ.எம். ஸ்டுடியோஸ்' ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் அனைவரையும் வாய் பிளக்க செய்துள்ளது. 

இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், ''அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தரலாம், ஆனால் கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் என்பதை நம்புபவன் நான். 'வேலைக்காரன்' படம் எனக்கு கிடைத்தது ஒரு அதிர்ஷ்டம். மோகன் ராஜா சாரின் இந்த அற்புதமான கதையில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு போட்டுளேன். 

'வேலைக்காரன்' படத்தின் ஹீரோ கதைதான். இந்த ஹீரோவுக்கு ஈடு கொடுக்க நான் உள்ளிட்ட எல்லா நடிகர்களும், அனைத்து  தொழில்நுட்ப கலைஞர்களும் உழைத்துள்ளோம். எந்த ஒரு சமுதாயத்துக்கும் இதய துடிப்பாக இருக்கும் உழைக்கும் வர்கத்தை பற்றிய படம் இது.

எல்லோரின் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த படம். இந்த படத்தின் ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞரும் தங்களது பெஸ்டுக்கும் மேல் தந்துள்ளனர். இது போன்ற அணியுடன் பணிபுரிந்தது எனது அதிர்ஷ்டம். தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் ஆதரவு, ஊக்கம், கனவு மற்றும் இயக்குனர் மோகன் ராஜாவின் கதை, எழுத்து மற்றும் அதை படமாக்கியுள்ள விதமே 'வேலைக்காரன்' படத்தை இவ்வளவு சிறப்பாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் 'வேலைக்காரன்' படத்தை ரசித்து, கொண்டாடி பாராட்டுவார்கள் என நம்புகிறேன்'' என்றார்.
Tags:    

Similar News