சினிமா

சிவகார்த்திகேயனை நான் ஸ்டாராகத்தான் பார்ப்பேன்: எடிட்டர் ரூபன்

Published On 2017-12-18 14:22 GMT   |   Update On 2017-12-18 14:22 GMT
முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணிபுரியும் எடிட்டர் ரூபன், சிவகார்த்திகேயனை நான் ஸ்டாராகத்தான் பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.
'வேலைக்காரன்' படத்தின் ப்ரோமோக்கள் மக்களிடையே பிரபலமடைந்ததற்கு அதன் அற்புதமான படத்தொகுப்பு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணிபுரியும் ரூபன், வேலைக்காரன் படத்தை பற்றியும், சிவகார்த்திகேயன் படத்தையும் பற்றி கூறும்போது, 

''சிவகார்த்திகேயன் எனது நீண்ட நாள் நண்பர். அவருடன் 'ரெமோ' படத்திற்கு பிறகு இது எனக்கு இரண்டாவது படம். ஆனால் ஒரு எடிட்டராக அவரை நான் ஒரு ஸ்டாராக தான் பார்ப்பேன். இந்த கண்ணோட்டம் எனது பணியை மேலும் சிறப்பாக்க உதவுகிறது. அவரது ரசிகர்கள் அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய அவரது ரசிகர்களை பின்பற்ற தொடங்கினேன். இது எனது எடிட்டிங்கிற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதனை கதையோடு அழாகாக இணைப்பது ஒரு சவாலான காரியமே.


'வேலைக்காரன்' போன்ற நட்சத்திர பட்டாளம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை கொண்ட படத்தை எடிட் செய்வது எளிதான காரியமல்ல. கதைக்குள் பல பரிமாணங்கள் இருப்பதால் இந்த படம் சவாலாகவே இருந்தது. உணர்வுகள், ஜனரஞ்சக தன்மை மற்றும் சமுதாய பொறுப்பு ஆகிய அம்சங்களை சரியான கலவையில் தருவது எனது இலக்காக இருந்தது'' என்றார்.
Tags:    

Similar News