சினிமா

கை தட்டுபவர்களை நம்பி அரசியலுக்கு வந்தால் முட்டாள் தனமானது: தேவா

Published On 2017-12-10 11:37 GMT   |   Update On 2017-12-10 11:37 GMT
கை தட்டுபவர்களை நம்பி தேர்தலில் நிற்கலாம் என கருதி தேர்தலில் நின்றால் அது ஓட்டாக மாறாது. அது முட்டாள் தனமானது என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

சேலம் அமெச்சூர் ஆர்ட் மற்றும் மாவட்ட இசைப்பள்ளி சார்பாக சேலத்தின் இன்று மாலை பொன் விழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க இசையமைப்பாளர் தேவா இன்று காலை சேலம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


சேலம் அமெச்சூர் ஆர்ட் அமைப்பு பழம் பெரும் அமைப்பாக உள்ளது. இதன் பொன்விழாவில் நான் பங்கேற்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அமைப்பின் சார்பில் நடக்கும் விழாவில் பழம் பெரும் நடிகர்கள், நடிகைகள், முன்னணி நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


நான் சினிமாவிற்கு திடீரென்று வரவில்லை. 14 ஆண்டுகளாக பல்வேறு துறையில் பணியாற்றி பின்னர் தான் சினிமாவிற்கு வந்தேன். திருமணம் மற்றும் பல்வேறு விழாக்களில் ஒரு காலத்தில் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடந்தது. தற்போது டி.ஜே. இசையால் மெல்லிசை கச்சேரி நடத்துபவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.


டி.ஜே. இசையைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். இதை குறை சொல்ல முடியாது. தற்போது தமிழ் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி பாடுவது வேதனை அளிப்பதாகவும் உள்ளது. ஆனால் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் தமிழில் பாடல் எழுதி பாடுகின்றனர். எனவே தமிழ்நாட்டில் கலாச்சாரம் மாற்றம் காணமுடிகிறது.


நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது விருப்பம். நடிகர் விஷால் அரசியலுக்கு வருவது அவருடைய தனிப்பட்ட முடிவு. கை தட்டுபவர்களை நம்பி தேர்தலில் நிற்கலாம் என கருதி தேர்தலில் நின்றால் அது ஓட்டாக மாறாது. அது முட்டாள் தனமானது. எனக்கு அரசியல் நாட்டம் கிடையாது. தற்போது அரசு நன்றாக செயல்படுகிறது.


திரை உலகில் பாடுவதற்கு அதிக வாய்ப்புகள் கொடுப்பவர் ஏ.ஆர்.ரகுமான். சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் துள்ளல் பாடல்கள் குறைந்துள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News