என் மலர்
நீங்கள் தேடியது "இசையமைப்பாளர்"
- தமிழ் திரையுலகம் என்பது இசை, பாடல், உணர்ச்சிகள் ஆகியவற்றின் அழகிய கலவை.
- ஜெயச்சந்திரன் தனது உணர்ச்சிமயமான குரலால் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார்.
இசையமைப்பாளர் சபேஷ் மற்றும் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவு இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தமிழ் திரையுலகம் என்பது இசை, பாடல், உணர்ச்சிகள் ஆகியவற்றின் அழகிய கலவை. இதில் தனித்துவமான பங்களிப்பு செய்தவர்கள் பலர். அவர்களில் இசையமைப்பாளர் சபேஷ் (சபேஷ்-முரளி ஜோடியின் ஒரு பகுதி) மற்றும் பாடகர் பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சபேஷ் தனது இசையால் தமிழ் சினிமாவை செழுமைப்படுத்தினார் என்றால், ஜெயச்சந்திரன் தனது உணர்ச்சிமயமான குரலால் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார். இவர்களின் திரைப்பயணம், தமிழ் இசையின் பொன்னான அத்தியாயங்களில் ஒன்று.
நம்மை விட்டு மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் மற்றும் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் திரையுல பங்களிப்புகள் குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்
இசையமைப்பாளர் சபேஷ்:
இசையமைப்பாளர் சபேஷ் சென்னையைச் சேர்ந்தவர். தமிழ் திரையிசையில் சபேஷ்-முரளி என்ற ஜோடியின் மூலம் இருவரும் புகழ்பெற்றனர். இவர்கள் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரர்கள். அண்ணன் தேவாவின் உதவியாளர்களாக தொழிலைத் தொடங்கிய இவர்கள், பின்னர் சுயாதீன இசையமைப்பாளர்களாக உருவெடுத்தனர்.
இசையமைப்பாளர் சபேஷ் அவர்களின் திரைப்பயணம் 1990களின் பிற்பகுதியில் தொடங்கியது, ஆனால் முழுமையான இசையமைப்பாளர்களாக 2001ஆம் ஆண்டு 'சமுத்திரம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் இசை கவனம் ஈர்த்தது.

சபேஷ்-முரளி ஜோடியின் இசை, உணர்ச்சிகரமான மெலடிகள் மற்றும் பின்னணி இசையால் பிரபலமானது. அவர்கள் இசையமைத்த 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' (2006), 'ஆட்டோகிராஃப்' (2004), 'தவமாய் தவமிருந்து' (2005) 'போக்கிஷம்' (2009), 'கூடல் நகர்' (2007), 'மிளகா' (2010), 'கோரிபாளையம்' (2010) , 'மாயாண்டி குடும்பத்தார் (2009)' ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
குறிப்பாக, 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இசை, வரலாற்று நகைச்சுவைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது. அவர்கள் சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளனர்.
சபேஷ், சினிமா இசைக்கழகத்தின் (Cine Musicians Union) முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார், இது அவரது தொழில்துறைக்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, 2025 அக்டோபர் 23ஆம் தேதி, 68 வயதில் சபேஷ் காலமானார். இது தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

பாடகர் ஜெயச்சந்திரன்:
பாடகர் ஜெயச்சந்திரன் தென்னிந்திய திரையிசையின் ஜாம்பவான். 1944 மார்ச் 3ஆம் தேதி கேரளாவின் இரிஞ்சலகுடாவில் பிறந்த இவர், 2025 ஜனவரி 9ஆம் தேதி தனது 80ஆம் வயதில் காலமானார்.
அவரது தந்தை ரவிவர்மா கொச்சனியன் தம்புரான் ஒரு இசைக்கலைஞர், இது ஜெயச்சந்திரனின் இசை ஆர்வத்தை தூண்டியது. இரிஞ்சலகுடா நேஷனல் உயர்நிலைப்பள்ளி மற்றும் கிறிஸ்ட் கல்லூரியில் படித்த இவர், மிருதங்கம் மற்றும் இலகு இசையில் மாநில இளைஞர் திருவிழாவில் பரிசுகள் வென்றார்.
ஜெயச்சந்திரனின் திரைப்பயணம் 1965இல் தொடங்கியது. அவரது முதல் பாடல் 'ஒரு முல்லப்பூ மலையுமாயி' ('குஞ்சலி மரக்கார்' படம், மலையாளம்).
தமிழில் 1973இல் 'மனிப்பயல்' படத்தில் 'தங்கச் சிமிழ் போல்' மற்றும் 'அலைகள்' படத்தில் 'பொன்னென்ன பூவென்ன' பாடல்களுடன் அறிமுகமானார்.

அவரது குரல், உணர்ச்சி மற்றும் மென்மையால் பிரபலமானது, இது இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், ஏ.ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற உதவியது. தமிழில் எண்ணற்ற பாடல்கள் பாடியுள்ளார்.
சில குறிப்பிடத்தக்க பாடல்கள்: 'வாழ்க்கையே வேஷம்' ('ஆறிலிருந்து அறுபது வரை', 1979), 'தாலாட்டுதே வானம்' ('கடல் மீன்கள்', 1981), 'காத்திருந்து காத்திருந்து' ('வைதேகி காத்திருந்தாள்', 1985), ராசாத்தி உன்ன ('வைதேகி காத்திருந்தாள்', 1985), 'மயங்கினேன் சொல்ல தயங்கினேன்' ('நானே ராஜா நானே மந்திரி', 1985), 'பூவ எடுத்து ஒரு' ('அம்மன் கோவில் கிழக்காலே', 1986), 'கத்தாழங்காட்டு வழி' ('கிழக்கு சீமையிலே', 1993), 'கண்ணத்தில் முத்தமிட்டால்' (2002). இவை அனைத்தும் இளையராஜா மற்றும் ரகுமானின் இசையில் உருவானவை.
அவரது சாதனைகள்: தேசிய திரைப்பட விருது (1985), 5 கேரளா ஸ்டேட் விருதுகள், 4 தமிழ்நாடு ஸ்டேட் விருதுகள், கலைமாமணி (1997), ஜே.சி. டேனியல் விருது (2020) ஆகியவை அடங்கும்.

16,000க்கும் மேற்பட்ட பாடல்களுடன், அவரது பங்களிப்பு தென்னிந்திய இசையை ஒருபடி மேலே உயர்த்தியது.
முடிவுரை:
சபேஷ் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோரின் திரைப்பயணம், தமிழ் சினிமாவின் இசைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்த்தது. சபேஷின் இசை அமைப்புகள் உணர்ச்சிகளை தூண்டினால், ஜெயச்சந்திரனின் குரல் அவற்றை உயிர்ப்பித்தது. அவர்களின் படைப்புகள் இன்றும் ரசிகர்களின் இதயங்களில் ஒலிக்கின்றன. தமிழ் திரையிசைக்கு இவர்களின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்...
இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது.
சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் இசையமைத்துள்ளார். பல்வேறு படங்களுக்கு பின்னணி இசை அமைத்த சபேஷ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார்.
இசையமைப்பாளர் சபேஷின் மறைவு திரையுலகினரின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சபேஷின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தேனிசைத் தென்றல்
தேவாவின் இளவல்
இசையமைப்பாளர்
சபேஷ் மறைவு
மனவலியைத் தருகிறது
கலையன்றி
வேறொன்றும் அறியாத
இசையே வாழ்வென்று வாழ்ந்த
ஒரு சகோதரர் சபேஷ்
அமைதியானவர்;
அவர் பேசியதைவிட
வாசித்ததே அதிகம்
அவரது மறைவு
தேவா குடும்பத்தார்க்கு மட்டுமல்ல
வாசிக்கப்படும்
இசைக்கருவிகளுக்கெல்லாம்
இழப்பாகும்
ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன்
அடங்கிவிட்டான்
அவரது ஆருயிர்
அமைதி பெறட்டும்
ஆழ்ந்த இரங்கல்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
- சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார்.
2020 கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.
"நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார். தொடர்ந்து சில படங்களிலும் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
'மஞ்ஞும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார்
டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை எழுதி பாடியிருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக வேடன் அறிமுகமாகிறார் . பரத், ஆரி அர்ஜுனன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.
வேடன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கன்னட சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் பயணித்துக் கொண்டிருப்பவர் மார்ட்டின் கிளெமெண்ட்
- ஜூன் 25 ஆம் தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
கன்னட சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் பயணித்துக் கொண்டிருக்கும் மார்ட்டின் கிளெமெண்ட், 'யுவன் ராபின்ஹுட்' படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர், மும்பை போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளர் மார்ட்டின் கிளெமெண்ட் இசை பணியில் பிஸியாக இருக்கிறார்.
ஒரு பக்கம் இசை என்றால் மறுபக்கம் இயக்கம் என்று 5 திரைப்படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் மார்ட்டின் கிளெமெண்ட், இயக்கிய கன்னட திரைப்படமான 'மார்ட்டின் யு' மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, வித்தியாசமான மிஸ்டரி திகில் படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படத்தின் மூலம் இயக்குநராக மட்டும் இன்றி இசையமைப்பாளராகவும் கவனம் ஈர்த்த மார்ட்டின் கிளெமெண்ட், தமிழ் சினிமாவிலும் தனது இசை மூலம் நிச்சயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பேன் என்ற நம்பிக்கையில் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், மார்ட்டின் கிளெமெண்ட் மனைவி ஷர்மிளா பிரசவத்திற்காக திண்டிவனத்தில் உள்ள புனித ஜோசப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 25 ஆம் தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதால் ஏற்கனவே பெரும் மகிழ்ச்சியில் இருந்த மார்ட்டின் கிளெமெண்ட் தந்தையாகியுள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதில், கூடுதல் சிறப்பு என்னவென்றால், மார்ட்டின் கிளெமெண்ட்டின் மனைவி ஷர்மிளாவின் பிறந்த தினமும் இதே ஜூன் 25 தான். ஆம், தாயும், மகனும் ஜூன் 25 ஆம் தேதி பிறந்திருக்கிறார்கள். குழந்தை பிறப்பே மட்டற்ற மகிழ்ச்சியை தரும் நிலையில், இப்படி ஒரு சிறப்புடன் பிறந்திருக்கும் இந்த குழந்தையால் மார்ட்டின் கிளெமெண்ட்டின் குடும்பம் அளவுக்கடந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது.
சென்னையில் பிறந்து, பெங்களூரில் படித்து வளர்ந்த மார்ட்டின் கிளெமெண்ட், கன்னட திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமானாலும், தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் என்னவோ, திண்டிவனத்தை சேர்ந்த ஷர்மிளாவை திருமணம் செய்துக் கொண்டவர், தற்போது சினிமாவுக்காக சென்னை டூ பெங்களூர் என்று பயணித்து தனது சினிமா பணியாற்றி வருகிறார்.
- இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் புகார் அளித்துள்ளார்.
- 2021 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படம் தொடங்கப்பட்டது.
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது சினிமா தயாரிப்பாளர் மோசடி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது ரூ.25 லட்சம் மோசடி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படத்திற்கு இசை அமைப்பதற்காக இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.-க்கு ரூ.25 லட்சம் முன்பணம் கொடுத்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படத்தின் பணிகள் பாதியிலேயே நின்றது. தற்போது அப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஆனால் இப்படத்திற்கு இசை அமைக்காமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் சாம் சி.எஸ் ஏமாற்றி வருகிறார்" என்று சமீர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வண்ணம் கொண்ட வெண்ணிலவே படத்தில் சச்சின், வகீஷா சல்காடோ ஆகியோர் நடித்துள்ளனர்.
- படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
ஆர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் அனுஷா மகாராஜன் & தயானி பாலா தயாரித்து இருக்கும் படம் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே'.
தனுஷான் சந்திரசேகர் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சச்சின், வகீஷா சல்காடோ ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நிலுக்ஷன் யோகேஸ்வரன் இசையில் அனிருத் பாடி இருக்கும் அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறாராம். இசை என்றாலே அந்த பிரபலத்தை தேடி பலர் செல்ல நண்பர் ஒருவரும் தன் படத்திற்கு இசையமைக்குமாறு கேட்டாராம். ஆனால், இசையமைப்பாளரோ புகழ் போதையில் அதலாம் செய்ய முடியாது என்று கூறிவிட்டாராம்.
இசையமைப்பாளர் ஏன் இப்படி சொன்னார் என்று யோசித்த நண்பருக்கு அதற்கு பிறகு தான் தெரிந்ததாம் இந்த செயலுக்கு பின்னால் பெரிய தலைகளின் தலையீடு உள்ளது என்று. இதனால் மனம் வெறுத்த நண்பர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாராம்.
- பாடல் வெளியாகி சில நாட்களில் பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்பாடலுக்கான யு ட்யூப் வீடியோ இதுவரைக்கும் 449 மில்லியன் வியூஸ்களையும், 4.8 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது.
- இந்த பாடலின் மூலம் எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பைசா வருமானமும் கிடைக்கவில்லை
எஞ்சாய் எஞ்சாமி எனும் பாடல் மார்ட் 7 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியானது.இந்த பாட்டை பாடியவர் 'அறிவு' மற்றும் 'தீ'. பாடகி தீ- க்கு இதுவே முதல் பாடல் ஆகும். சந்தோஷ் நாராயணன் தான் இப்பாடலிற்க்கு இசையமைத்தார்.
இப்பாடல் மாஜா என்னும் ம்யூசிக் லேபல் தயாரித்தது.
பாடல் வெளியாகி சில நாட்களில் பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்பாடலுக்கான யு ட்யூப் வீடியோ இதுவரைக்கும் 449 மில்லியன் வியூஸ்களையும், 4.8 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது.

இந்தப் பாடல் தமிழ் பாடலை உலகளவிற்க்கு கொண்டு புகழ் வர செய்தது. இந்த பாடல் வெளியாகி 3 ஆண்டு முடிவடைந்த நிலையில் .அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவினை பதிவிட்டுள்ளார் அதில் அவர் "இந்த பாடலின் மூலம் எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பைசா வருமானமும் கிடைக்கவில்லை , இந்த பாடலுக்கான வருமானம் எல்லாம் அந்த பாடல் தயார் செய்த ம்யூசிக் தயாரிப்பாளர்களுக்கே செல்கிறது . நான் இது வரைக்கும் எந்த வலைதளங்களிலும் இதை பற்றி பேசியதில்லை. இதை பற்றி இப்பொழுது பேச தோன்றியது அதனால் கூறுகிறேன் . இப்பதிவினை முடிந்த அளவுக்கு அனைவருக்க்கும் பகிர செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தனி இசைக் கலைஞர்களுக்கு கூடுதல் வெளிப்படை தன்மையாக இயங்கும் தளங்கள் தேவை அதனால் நான் ஒரு ம்யூசிக் ஸ்டூடியோ ஒன்று தொடங்குவேன் .
தனி இசைக் கலைஞர்கள் இதனால் கவலை பட வேண்டாம் உங்களை வந்து சேர வேண்டியது கண்டிப்பாக வந்து சேரும்" என்று அவரின் ஆதங்கத்தை அதில் பதிவிட்டுள்ளார்.
- சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது.
- நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் முஸ்லிம் ஜமாத்தார் மற்றும் மீனவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா" அவர்களின் 351-ம் ஆண்டு கந்தூரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜமாத்தார் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் முஸ்லிம் ஜமாத்தார் மற்றும் மீனவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.
- 2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு.
- ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது.
2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது.
குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன் குமார் இசையமைத்து இருந்தார். அதைத்தொடர்ந்து ராக்கதன், மேதகு 2 , கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.
28 வயதான பிரவீன் குமார் உடல் நிலை குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவ்வளவு சிறு வயதிலே ஒருவர் காலமானது மக்களிடையே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
- விமல் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான்.
- அண்மையில் ரிலீஸ் ஆன குரங்கு பெடல் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.
விமல் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்த ஜிப்ரானுக்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன. இதையடுத்து வத்திக்குச்சி, திருமணம் எனும் நிக்காஹ், குட்டி புலி, அமர காவியம், உத்தம வில்லன், பாபநாசம், அறம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், துணிவு என 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜிப்ரான், அண்மையில் ரிலீஸ் ஆன குரங்கு பெடல் படத்துக்கும் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் வெளியிட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், தான் இஸ்லாம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறிய ஜிப்ரான், அதோடு தன் பெயரையும் மாற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை தன்னுடைய படங்களில் ஜிப்ரான் என்கிற பெயரை மட்டும் பயன்படுத்தி வந்த அவர், குரங்கு பெடல் படத்தில் ஜிப்ரான் வைபோதா என தன்னுடைய புது பெயரை போட்டிருந்தார். பெயர் மாற்றம் குறித்தும் அந்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் ஜிப்ரான்.
குரங்கு பெடல் படம் எனக்கு மனதுக்கு நெருக்கமான படமாக இருந்தது. அதனால் இந்த படத்தில் இருந்து அப்பா பெயரையும் என்னுடைய பெயருடன் சேர்த்துவிடலாம் என முடிவு செய்தேன். என்னுடைய தந்தை பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா. வைபோதா என்றால் விழித்தெழுதல் என பொருள். வாகை சூடவா படம் நான் பிடிச்சு பண்ண படம், அதேபோன்ற ஒரு உணர்வோடு குரங்கு பெடல் படமும் இசையமைத்தேன். அதனால் இப்படத்தில் இருந்து என்னுடைய புது பெயரை பயன்படுத்த முடிவு செய்தேன். இனி நான் பணியாற்றும் படங்களிலும் ஜிப்ரான் வைபோதா என்றே பயன்படுத்த உள்ளேன் என அவர் கூறி இருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார்.
- கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி தம்பதி விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்களிலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 11 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் தங்களது குடும்பத்தாருக்கு இடையே எழுந்துள்ள பிரச்சனையால் ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. மேலும் இருவரும் விரைவில் விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்ல உள்ளனர் என்றும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
நட்சத்திர ஜோடியாக வளம் வந்த ஜி.வி. - சைந்தவி தம்பதி பிரிய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் விக்ரமின் 'தங்கலான்', 'வீர தீரச் சூரன்', பாலாவின் 'வணங்கான்', சிவகார்த்திகேயனின், 'அமரன்', தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






