சினிமா

நல்ல படைப்புகளை உருவாக்க போராட வேண்டியது இருக்கிறது: தங்கர்பச்சான்

Published On 2017-11-06 16:35 GMT   |   Update On 2017-11-06 16:35 GMT
மீரா கதிரவனின் ‘விழித்திரு’ படத்தை பார்த்த தங்கர் பச்சான், நல்ல படைப்புகளை உருவாக்க போராட வேண்டியது இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இயக்குனர் மீரா கதிரவனின் 2-வது படம் ‘விழித்திரு’. இந்த படத்தை பார்த்த இயக்குனர் தங்கர்பச்சான் இப்படம் பற்றி கூறுகிறார்...

“என்னுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மீரா கதிரவன். அவர் இயக்கத்தில் 2-வது படமாக வெளியாகி இருக்கும் படம் ‘விழித்திரு’. இது பல இன்னல்களை கடந்து வந்து இருக்கிறது.

இந்த படைப்பாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. கள்வர்களின் காலமாக மாறிவிட்ட இந்த நாட்டில் வட்டிக்கு கடன் வாங்கி, பல்வேறு அவமானங்களை சகித்துக் கொண்டு நல்ல படைப்புகளை உருவாக்க போராட வேண்டியது இருக்கிறது. அப்படித்தான் மீரா கதிரவனும் தயாரிப்பாளராக வேண்டியது இருக்கிறது.

படம் சரியில்லை என்று சொன்னாலும், எது சரியில்லை என்பதை பார்ப்பதற்காகவே மக்கள் மசாலா நடிகர்களின் படங்களை பார்க்கிறார்கள். நூறு கோடி, இருநூறு கோடி என்று அள்ளிக் கொடுக்கிறார்கள். அதுபோன்ற நடிகர் இல்லாத படங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று எத்தனை பேர் சொன்னாலும் அதை காதில் வாங்கிக் கொள்வது இல்லை. இதனாலேயே இந்த சமூகத்துக்கு பங்களிக்க வேண்டிய சிறந்த கலைஞர்கள் காணாமல் போய் விடுகிறார்கள்.

இது திரைப்படத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் தொடர்கிறது. இனியும் இப்படிப்பட்ட தவறுகளுக்கு தமிழ் சமூகம் இடம் தரக்கூடாது. புதிய பாணியில் சலிப்பு தட்டாமல் படமாக்கப்பட்டுள்ள ‘விழித்திரு’ படத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். நல்ல படைப்பாளியான மீராகதிரவன் படம் மக்கள் ஆதரவுடன் வெற்றி பேற வேண்டும்’ என்றார்.
Tags:    

Similar News