சினிமா

200 நடன கலைஞர்களுடன் ஆடிப்பாடிய சினேகன்

Published On 2017-11-01 09:38 GMT   |   Update On 2017-11-01 09:38 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான கவிஞர் சினேகன், புதிய படத்திற்காக 200 நடன கலைஞர்களுடன் ஆடிப்பாடி இருக்கிறார்.
வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’. இந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலுக்கு சினேகன் நடனம் ஆடியிருக்கிறார். இந்தப்பாடலை எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது.

“எதுவும் தப்பில்லை, எவனும் புத்தனில்லை...’ என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி இது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது.

இந்தப் படத்தை விஜய சேகரன் என்பவர் இயக்கி இருக்கிறார். மரியா மனோகர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வரி வீடியோவை நடிகர் விஷால் மற்றும் தயரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவரும் வெளியிட்டார்கள்.
Tags:    

Similar News