சினிமா

காலா படத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

Published On 2017-10-31 10:51 GMT   |   Update On 2017-10-31 10:51 GMT
ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘காலா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கை தள்ளுபடி செய்து சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காலா’. ரஞ்சித் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினியுடன் ஹூமா குரேஷி, சமுத்திரகனி, சம்பத், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘காலா’ படத்துக்கு தடை கோரி, சென்னை 4-வது சிட்டி சிவில் கோர்ட்டில் ராஜசேகரன் என்பவர் கரிகாலன் என்ற அடைமொழியுடன் காலா படத்தை தயாரிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜசேகரனை யார் என்றே தெரியாது’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News