சினிமா

கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2017-10-31 09:53 GMT   |   Update On 2017-10-31 09:53 GMT
கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - அஷ்ரிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரஜித் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சக்கரகட்டி படத்திற்கு பிறகு கலைப்புலி எஸ். தாணுவின் மகனான கலாபிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `இந்திரஜித்'.

கவுதம் கார்த்திக் - அஷ்ரிதா ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சோனாரிகா படோரியா, ராஜ்வீர் சிங், சுதன்சு பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கெடேக்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.



கேபி இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தான் சிபிராஜ் நடிப்பில் `சத்யா' படமும், அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் `சென்னை 2 சிங்கப்பூர்' படமும் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News