சினிமா

விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்

Published On 2017-10-24 16:24 GMT   |   Update On 2017-10-24 16:24 GMT
கவுதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, ஹரியின் ‘சாமி 2’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வரும் விக்ரம், திடீர் என்று விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் தற்போது ‘ஸ்கெட்ச்’ படம் உருவாகி உள்ளது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை தவிர கவுதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, ஹரியின் ‘சாமி 2’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விக்ரம்.

இவர் திடீர் என்று விவேக் வீட்டிற்கு சென்றிருக்கிறார். விக்ரம் தன்னுடைய வீட்டிற்கு திடீர் என்று வந்திருப்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

மேலும், விக்ரமுடன் புகைப்படத்தை எடுத்து அதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, இன்று திடீரென கென்னி (விக்ரம்) எனது வீட்டிற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சோ மச் ஆஃப் நாஸ்டால்ஜியா எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Tags:    

Similar News