சினிமா

திரையரங்குகளில் மட்டும் ஏன் தேசியகீதம் கட்டாயம்? - அரவிந்த்சாமி கேள்வி

Published On 2017-10-24 15:20 GMT   |   Update On 2017-10-24 15:20 GMT
திரையரங்குகளில் மட்டும் ஏன் தேசியகீதம் கட்டாயம் என்று நடிகர் அரவிந்த்சாமி தனது சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரவிந்த்சாமி கூறும்போது, ‘நான் எப்போதுமே தேசிய கீதம் இசைக்கப்படும்போது பெருமையோடு எழுந்து நின்று, பாடுவேன். அது திரையரங்குகளில் மட்டும் ஏன் கட்டாயம் என்பது எனக்கு புரிந்ததில்லை.

ஏன் அனைத்து அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்டப்பேரவை, பாராளுமன்றக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு தினமும் தேசியகீதம் இசைக்கக் கூடாது?

இவ்வாறு அரவிந்த்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News