சினிமா

மகள் சிபாரிசால் இளைய மகனை இயக்குனர் ஆக்கினேன்: கலைப்புலி எஸ்.தாணு

Published On 2017-10-21 08:35 GMT   |   Update On 2017-10-21 08:35 GMT
என் மகள் சிபாரிசு செய்ததால் தனது இளைய மகனை இயக்குனர் ஆக்கினேன் என்று ‘இந்திரஜித்’ பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘இந்திரஜித்’.

தாணுவின் இளைய மகன் கலாபிரபு இந்த படத்தை இயக்குகிறார். கே.பி.என்பவர் இசை அமைக்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது பேசிய தாணு...

“என் இளைய மகனும் சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைத்த போது, அது தேவையா என யோசித்தேன். அண்ணனுக்கு பட வாய்ப்பு கொடுங்கள் என்று என் மகள் சொன்னார்.

முதலில் ‘சக்கரகட்டி’ என்ற அருமையான படத்தை கலாபிரபு கொடுத்தார். நான் பல ஆண்டுகளாக கார்த்திக்கிடம் கால்ஷீட் கேட்டு வந்தேன். அவர் தரவில்லை. அவரை வைத்து படம் தயாரித்தது இல்லை. ‘இந்திரஜித்’ படத்தில் அவருடைய மகன் கவுதம் ஹீரோவாக நடிப்பது சிறப்பு.



தேவிஸ்ரீ பிரசாத்திடம் உதவியாளராக இருந்த கே.பி. இசையமைக்கிறார். கவுதம் கார்த்திக் இதில் வேறு லெவலில் நடித்துள்ளார்” என்றார்.

“இந்த படத்துக்கு கே.பி. இசையமைக்கிறார் என்று இயக்குனர் சொன்னார். அவரை நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு சஸ்பென்சாக வைத்து இருந்தார்கள். இன்றுதான் அவரை பார்த்தேன்” என்று கூறினார்.

கவிஞர் கபிலன் வைரமுத்து, “இசையமைப்பாளரை ஹீரோ பார்க்கவில்லை என்பது கூட ஓ.கே. பாடல் எழுதிய நானே பார்க்கவில்லை” என்றார் சிரித்தபடியே.

Tags:    

Similar News