சினிமா

படப்பிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் ஜுங்கா

Published On 2017-09-27 16:59 GMT   |   Update On 2017-09-27 16:59 GMT
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் ‘ஜுங்கா’ படத்தின் படப்பிடிப்பு முன்பே வியாபாரம் ஆகியிருக்கிறது.
‘விக்ரம் வேதா’விற்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா’ படத்தினை படப்பிடிப்பு செல்லும் முன்பே ஏ&பி குரூப்ஸ் என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இது குறித்து படக்குழுவினர் பேசும் போது, ‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ&பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம்’ என்றனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற வெற்றிப்படத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News