சினிமா

தடைகளை தாண்டி ரிலீசாகும் விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’

Published On 2017-09-01 03:02 GMT   |   Update On 2017-09-01 03:02 GMT
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘புரியாத புதிர்’ படம் தடைகளை தாண்டி இன்று ரிலீசாவது உறுதியாகியிருக்கிறது.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி - காயத்ரி ஷங்கர் நடிப்பில் த்ரில்லர் பின்னணியில் உருவாகியிருக்கும் படம் ‘புரியாத புதிர்’.

பல சிக்கல்களை தாண்டி இன்று (செப்டம்பர் 1) படம் ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படம் ரிலீசுக்கு ஒரு நாள் முன்னதாக நேற்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் இந்த படத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த திரைப்படத்தில் இரவு-பகலாக பணியாற்றிய கலைஞர்கள் உள்பட ஏராளமான தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை தராததால் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.



இந்நிலையில், படத்திற்கு விதிக்கப்பட்ட தடைகள் நீங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் நிறுவனர் சதீஷ் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கவலை வேண்டாம். நாளை முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை திரையில் காணலாம் என்று அறிவித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் 350 திரையரங்குகளில் படம் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News