சினிமா

ஜி.எஸ்.டி. குறித்து விஜய் மில்டனின் புதிய அறிவிப்பு

Published On 2017-08-29 16:22 GMT   |   Update On 2017-08-29 16:22 GMT
இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் GST குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் ‘கோலி சோடா’ படம் மூலம் இயக்குனராக புகழ் பெற்றார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வணீக ரீதியாகவும் வெற்றியை தேடித் தந்தது. இப்படத்தின் வெற்றியை தொடந்து விக்ரமை வைத்து ‘10 எண்றதுக்குள்ள’ படத்தை இயக்கினார்.

இதையடுத்து சமீபத்தில் பரத், ராஜ்குமாரை வைத்து ‘கடுகு’ என்ற படத்தை இயக்கியிருந்தார். சமுக அக்கறை கருத்தோடு வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தற்போது ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் விஜய் மில்டன்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Goli Soda Two படத்தை சுருக்கமாக GST என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வாய்ஸ் டீசர் செப்டம்பர் 8ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த வாய்ஸ் டீசருக்கு இயக்குனர் கௌதம் மேனன் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் சமுத்திரகனி, சுபிக்‌ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News