சினிமா

குரங்கு பொம்மை ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2017-08-29 11:53 GMT   |   Update On 2017-08-29 11:53 GMT
பாரதிராஜா - விதார்த் நடிப்பில் நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘குரங்கு பொம்மை’ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிராஜா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இதில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். மேலும் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறார் நித்திலன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக பாரதிராஜா நடித்திருக்கிறார். மேலும் அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாகவும், ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பையும் படமாக்கி இருக்கிறார்கள்.


அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
Tags:    

Similar News