search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதி ராஜா"

    • அட்வென்ச்சர், ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படமாக கள்வன் உருவாகி இருக்கிறது.
    • இந்த படத்தில் பாரதி ராஜா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் 'கள்வன்' படம் சிறப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் இந்த பரபரப்பான அட்வென்ச்சர் - ஆக்ஷன் திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த படம் தொடர்பாக ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.வி. ஷங்கர் கூறும்போது, "சில ஜானர் படங்கள் மொழி, பிராந்திய எல்லைகளைத் தாண்டி பார்வையாளர்களைக் கவரும். ஒரு ஒளிப்பதிவாளராக காடுகளை அடிப்படையாகக் கொண்ட படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக உணர்ந்தேன்."

    "ஆக்ஷன், அட்வென்ச்சர், எமோஷன் எனப் பல த்ரில்லர் தருணங்களை ஒன்றாகக் கொண்ட இந்தப் படம் பார்வையாளர்களுக்குத் தரமான எண்டர்டெயின்மெண்ட் ஆக இருக்கும். அழகான காதல், நகைச்சுவை என ஒரு ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படத்திற்கான அனைத்து அம்சங்களையும் இந்தப் படம் கொண்டுள்ளது."

    'கள்வன்' படத்திற்காக, ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அளப்பரியது. ஒரே நேரத்தில் இசை மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்துவது எளிதானது கிடையாது. ஆனால், இந்தப் படத்துக்கான இயல்பான நடிப்பு மற்றும் அழகான பாடல்கள் கொடுத்து எங்கள் எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார்."

    "இவானா திறமையான நடிகை. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாரதிராஜா சாருடன் பணிபுரிய வேண்டும் என்பது பலருடைய கனவு. அந்தக் கனவு எனக்கு நிறைவேறி இருப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் பாபு.
    • பாபு கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார்.

    பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'என் உயிர் தோழன்'. இந்த படத்தில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவை கதாநாயகனாக்கி படத்தை வெற்றி படமாக மாற்றினார் பாரதிராஜா. அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முத்திரை பதித்தவர் பாபு.

    அன்றிலிருந்து 'என் உயிர் தோழன்' பாபு என்ற பெயருடன் வலம் வந்த இவர் விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் கதாநாயகான நடித்தார். நான்கு படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பாபு 5-வது படத்தில் தனது திரை வாழ்க்கையே தொலைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.


    பாபு

    கடந்த 1991-ல் 'மனசார வாழ்த்துக்களேன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சண்டை காட்சி ஒன்றில் பாபு, மேலே இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இதில் நானே குதிக்கிறேன் என்று பாபு தயாராகினார். ஆனால், படப்பிடிப்பு குழுவினர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறி டூப் நடிகரை தயார்படுத்தியுள்ளனர். பாபு நானே குதிக்கிறேன் என்று குதித்த போது

    டைமிங் மிஸ் ஆனதால், வேறு இடத்தில் விழுந்துள்ளார். இதில் அவரது முதுகெலும்பு உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, குணமாகாததால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார்.


    பாரதிராஜா - பாபு

    இந்நிலையில், நடிகர் பாபு இன்று காலமானார். இவருக்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த " என் உயிர் தோழன் பாபு "வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    வாத்தி

    இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'வாத்தி' திரைப்படத்தை பாராட்டி இயக்குனர் பாரதி ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் திரையுலக பயணத்தில் எத்தனையோ மைல்கள்களை தாண்டி வந்திருக்கிறேன். சில இடங்களில் ஸ்தம்பித்து நின்றிருக்கிறேன். அப்படி என் பயணத்தின் போது ஸ்தம்பித்து நின்ற இடம் தான் 'வாத்தி'.


    வாத்தி

    கல்வி இந்த சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதை கூறுகிறது 'வாத்தி'. தனுஷ் என் பிள்ளை மாதிரி. அவன் பொழுதுபோக்கிற்காக படம் செய்தாலும் சமுதாய நோக்கத்திற்காக செய்கிறான். இப்படி ஒரு பிள்ளை கிடைப்பதற்கு திரையுலகம் தவம் செய்திருக்க வேண்டும். அவன் நடிகன் மட்டுமல்ல எழுத்தாளன், பாடகன் சிந்தனை மனிதன் தனுஷ். எத்தனையோ முத்துக்கள் இருக்கிறது திரையுலகில் அதில் ஒரு சிறந்த முத்து சமுத்திரக்கனி. சம்யுக்தா விடம் ஒரு டீசருக்கான அம்சம் இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் ஒரு பெரிய வரப்பிரசாதம். இந்த வருடத்தில் இசையமைப்பிற்கும் சரி நடிப்புக்கும் சரி ஜி.விக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.


    • 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இயக்குனர் பாரதிராஜா.
    • இவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.


    பாரதி ராஜா

     இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று பார்த்தனர்.

    இந்நிலையில் பாரதிராஜா இன்று வீடு திரும்பினார். இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த பாரதி ராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பேசியதாவது, "அப்பா நன்றாக இருக்கிறார். பழைய பாரதிராஜாவை நீங்கள் பார்க்கலாம். பழைய கிண்டல், கேலி எல்லாம் உள்ளது. இதற்கு மிகப்பெரிய நன்றியை நான் மருத்துவமனைக்கு தான் சொல்ல வேண்டும்.


    பாரதிராஜா - மனோஜ்

    ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து உண்மையை ஆராய்ந்து செய்தி வெளியிடுங்கள். அப்பாவின் அனைத்து மருத்துவச் செலவையும் நான் தான் பார்த்தேன். எங்களுடைய குடும்ப வங்கியில் இருந்து தான் அனைத்து செலவையும் செய்தோம். சிகிச்சைக்கு பணம் இல்லை என்று கூறிய செய்திகள் வதந்தியானது.

    எங்கள் நண்பர்களின் அறிவுறுத்தல் மூலம் தான் நாங்கள் இந்த மருத்துவமனைக்கு வந்தோம். மருத்துவர்கள் அனைவரும் எனக்கு கடவுள் தான்" என்று பேசினார்.

    ×