சினிமா

சிரஞ்சீவி பிறந்தநாளில் ராஜமவுலி வெளியிடும் போஸ்டர்

Published On 2017-08-21 05:53 GMT   |   Update On 2017-08-21 05:53 GMT
சிரஞ்சீவி பிறந்தநாளான நாளை பாகுபலி பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட இருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘கைதி எண் 150’. சிரஞ்சீவி அடுத்ததாக சுதந்திர போராட்ட தியாகி உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அவரது மகன் ராம்சரண் தயாரிக்க உள்ளார்.

தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் நடிக்க இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். வில்லனாக நடிக்க கன்னட நடிகர் ‘நான் ஈ’ சுதீப் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.



இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் சிரஞ்சீவியின் பிறந்தநாளான நாளை (22.8.2017) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை `பாகுபலி' பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி வெளியிட இருக்கிறார்.

சிரஞ்சீவி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News