சினிமா

செக்ஸ் காட்சிகளில் நடித்த நடிகருடன் பேச மறுத்த மனைவி

Published On 2017-08-18 11:02 GMT   |   Update On 2017-08-18 11:02 GMT
செக்ஸ் காட்சிகளில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கி உடன் அவரது மனைவி பேச மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
நவாசுதீன் சித்திக்கி நடித்துள்ள இந்தி படம் ‘பாபுமோஷாய் பந்துசக்பாஸ்’ ஏராளமான செக்ஸ் காட்சிகளை வைத்து இந்த படத்தை இயக்கி இருப்பவர் கு‌ஷன் நந்தி. இந்த படத்துக்கு சென்சார் போர்டு 48 இடங்களில் ‘கட்’ கொடுத்து இருக்கிறது.

செக்ஸ் காட்சிகளில் துணிந்து நடித்துள்ள நவாசுதீனிடம், ‘இப்படி நடித்திருக்கிறீர்களே உங்கள் மனைவி எதுவும் சொல்ல வில்லையா?’ என்று கேட்ட போது, “நான் செக்ஸ் காட்சிகளில் நெருக்கமாக நடித்தது பற்றி கேள்விப்பட்ட என் மனைவி 2 நாட்களாக என்னுடன் பேசவே இல்லை. பெரும்பாடுபட்டு அவரை ஒருவழியாக சமாதானம் செய்தேன்” என்று கூறியுள்ளார்.



48 இடங்களில் காட்சிகளை சென்சார் அதிகாரிகள் வெட்டச் சொன்னதை இந்த படத்துக்கு விளம்பரமாக்கி விட்டார்கள். இதனால் இதை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து இருப்பதாக இந்திபட வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Tags:    

Similar News