சினிமா

`நரகாசூரன்' படத்தில் கார்த்திக் நரேனின் அடுத்த அதிரடி

Published On 2017-08-17 07:11 GMT   |   Update On 2017-08-17 07:11 GMT
`துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் தமிழில் இயக்குநரான காத்திக் நரேன் அடுத்ததாக இயக்கவிருக்கும் `நரகாசூரன்' படத்தில் அதிரடி முயற்சி ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார்.
கடந்த ஆண்டு `துருவங்கள் பதினாறு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரது வாழ்த்துக்களையும் பெற்ற இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். அவரது இயக்கத்தில் அடுத்ததாக `நரகாசூரன்' படம் உருவாக இருக்கிறது.

இந்த படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கிறது.

`நரகாசூரன்' படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் ஊட்டியில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற இருக்கிறது.



இந்நிலையில், `நரகாசூரன்' படத்தில் பாடல்களே கிடையாது என்ற புதிய தகவலும் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னதாக சிவாஜியின் `அந்த நாள்', கமலின் `குருதிப்புனல்' உள்ளிட்ட படங்களில் பாடல்களே கிடையாது.

மேலும் `ஆரண்ய காண்டம்', `அந்தநாள்', `கடமை கண்ணியம் கட்டுப்பாடு', `குற்றமே தண்டனை', `சந்தியா ராகம்', `சில சமயங்களில்', `முகம்', `நாம்', `நடுநிசி நாய்கள்', `உன்னைப்போல் ஒருவன்', `ஹவுஸ்ஃபுல்', `ஓணாயும் ஆட்டுக்குட்டியும்', `ஒருவீடு இருவாசல்', `வனயுத்தம்', `வீடு', `விசாரணை', `பசி', `பயணம்' உள்ளிட்ட படங்களில் பாடல்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News