சினிமா
கோப்புப் படம்

கேரள நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு

Published On 2017-07-25 11:36 GMT   |   Update On 2017-07-25 11:36 GMT
நடிகைகள் யாரும் பாலியல் கொடுமைக்கு ஆளாவதில்லை என்று குறிப்பிட்டிருந்த கேரள நடிகர்கள் சங்க பொதுக்குழுவுக்கு கேரள நடிகைகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து குற்றம் சாட்டியுள்ளது.
கேரள நடிகர்கள் சங்க பொதுக்குழுவில், அந்த மாநிலத்தில் நடிகைகள் யாரும் பாலியல் கொடுமைக்கு ஆளாவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் ‘கலெக்டிவ் வுமன் இன் சினிமா’ என்ற பெயரில் இயங்கி வரும் கேரள பெண் நடிகைகள் சங்கம், நடிகர் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மஞ்சுவாரியர் தலைமையில் இயங்கி வரும் இந்த சங்கம், ‘சினிமா வாய்ப்பு தேடி வரும் புதுமுக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். ஆதிக்க மனம் கொண்ட அதிகார துஷ்பிரயோகம் கேரளாவில்தான் அதிகம் உள்ளது’ என்று தெரிவித்து இருக்கிறது.

Tags:    

Similar News