சினிமா

போதை பொருள் விவகாரத்தில் இயக்குனர் பூரிஜெகனாத்திடம் ரத்த மாதிரி சேகரிப்பு

Published On 2017-07-20 09:53 GMT   |   Update On 2017-07-20 09:53 GMT
போதை பொருள் குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் பூரி ஜெகனாத்திடம் நேற்று விசாரணை நடத்தப்பட்ட போது, ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட போதை பொருள் கும்பல் தலைவன் கெல்வின், பியூஷ் ஆகியோரு டன் தெலுங்கு நடிகர்- நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து நடிகர்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், நந்து, தனீஷ், சுப்பராஜித், நடிகைகள் சார்மி, முமைத் கான், இயக்குனர் பூரி ஜெகனாத் உள்பட 12 பேருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கான விசாரணை நேற்று நாமப்பள்ளியில் உள்ள டி.ஜி.பி அலவலகத்தில் தொடங்கியது. முதல் நாளில் இயக்குனர் பூரிஜெகனாத் போலீசார் முன்பு ஆஜரானார். காலை 10.30 மணிக்கு சென்ற அவரிடம் சுமார் 10 மணிநேரம் விசாரணை நடந்தது.

முதலில் போதை பொருள் கும்பல் தலைவன் கெல்லின் யார் என்றே தெரியாது என்று பூரிஜெகனாத் கூறினார்.

ஆனால் போலீசார் கெல்லினுடன் பூரிஜெகனாத் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டியதும் கெல்லினை தெரியும் என்று ஒப்புக்கொண்டார். சினிமா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பணி தொடர்பாக மட்டுமே கெல்லினை தெரியும் என்றும் போதை பொருள் விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார். இதையடுத்து அவரிடம் உயர் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். மேலும் பூரி ஜெகனாத் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதற்காக டாக்டர்கள் குழு போலீஸ் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

பூரிஜெகனாத்திடம் இரவு வரை விசாரணை நீடித்ததால் அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அவரை விசாரணை முடிந்து இரவு வீட்டுக்கு அனுப்பினர். இன்று நடக்கும் விசாரணையில் ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு ஆஜர் ஆகிறார்.
Tags:    

Similar News