சினிமா

பிரதமர் மோடி முன்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பிரியங்கா சோப்ரா

Published On 2017-05-31 12:11 GMT   |   Update On 2017-05-31 12:11 GMT
பிரதமர் மோடியை சந்தித்தபோது கால்மேல் கால் போட்டு அமர்ந்து பேசியதால் பிரியங்கா சோப்ராவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.
அரசு முறை பயணமாக 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி சென்றபோது நடிகை பிரியங்கா சோப்ரா அவரை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் முன்பு அவர் குட்டைப் பாவடை அணிந்து கால் மேல் கால் போட்டு  தெரியும்படியாக அமர்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் பிரியங்கா சோப்ரா.



இந்த பதிவை பார்த்த பலரும் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர். ஒரு நாட்டின் பிரதமர் முன்னிலையில் கால் மேல் கால் போட்டு மரியாதை இல்லாமல் இப்படி அமர்ந்திருப்பதா? அதேபோல், பிரதமரை சந்திக்கும்போது நம்முடைய கலாச்சாரப்படி உடை அணிய வேண்டாமா? என நிறைய பேர் பிரியங்காவை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

அதேநேரத்தில், நாற்பது நாட்களாக டெல்லியில் போராடிய விவசாயிகளை சந்திக்க மறுத்ததும், நாடு முழுக்க மாட்டிறைச்சி தடை விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைப்பற்றியெல்லாம் கருத்து கூறாமல் நடிகையை சந்திக்க மட்டும் எப்படி நேரம் ஒதுக்குகிறார் என்று மோடி மீது பலரும் கொந்தளிப்போது தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.



இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்ட்கிராம் கணக்கில் ஒரு புகைப்படத்தை பகிரிந்துள்ளார். தனது அம்மா மது சோப்ராவுடன் பிரியங்கா சோப்ரா ஒரு உணவு விடுதியில் கால்கள் தெரியும்படி அமர்ந்திருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு என்றுமே கால்கள்தான், அது மரபணுவிலேயே இருப்பது’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்துக்கும் நெட்டிசன்களில் சில பேர் ஆதரவு தெரிவித்தும், எதிர்த்தும் தங்களது வாக்குவாதங்களை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News