சினிமா

தமிழ் திரையுலக வேலைநிறுத்த போராட்டத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு

Published On 2017-05-16 12:38 GMT   |   Update On 2017-05-16 12:38 GMT
தமிழ் திரையுலகம் சார்பில் வருகிற ஏப்ரல் 30-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருட்டு விசிடி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 30-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்திருந்தார். அன்றுமுதல் எந்த திரையரங்குகளிலும் படங்கள் ஓடாது எனவும், படப்பிடிப்பு நடத்தப்படாது எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இணைந்து இன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.



அதில், வருகின்ற 30.05.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்ற வரும் செய்திகள் உண்மையல்ல எனவும், 30.5.2017 (செவ்வாய்கிழமை) அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News