சினிமா

இணையதளத்தில் பாகுபலி-2: கமி‌ஷனர் அலுவலகத்தில் விஷால் புகார்

Published On 2017-05-07 09:35 GMT   |   Update On 2017-05-07 09:35 GMT
பாகுபலி-2 படம் இணையதளத்தில் வெளியானதையடுத்து விஷால் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் என்ன குறிப்பிட்டிருக்கிறார் என்பதை கீழே பார்ப்போம்.

‘பாகுபலி-2’ படம் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளத்திலும் வெளியானது. இதுகுறித்து, நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது:- சமீபத்தில் வெளியான 'பாகுபலி-2' திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதேபோல் புது படங்கள் அனைத்தும் அந்த இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆனால், ‘பாகுபலி-2’ படம் இணையதளத்தில் வெளியான பிறகும்கூட இதுவரையில் இந்திய சினிமாவில் எந்தவொரு சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News