சினிமா

இளையராஜா அனுப்பிய நோட்டீசுக்கு எஸ்.பி.பி.சரண் பதில்

Published On 2017-03-20 07:20 GMT   |   Update On 2017-03-20 07:20 GMT
பாடலுக்கு உரிமை மீறல் தொடர்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு இளையராஜா அனுப்பிய நோட்டீசுக்கு, எஸ்.பி.பி.சரண் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் என்ன தெரிவித்தார் என்பதை கீழே பார்ப்போம்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதைத் தொடர்ந்து, அவரது மகனும் பாடகருமான  எஸ்.பி.பி.சரண், எஸ்.பி.பி. 50 என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

அதனைதொடர்ந்து, எஸ்.பி.பி 50 என்ற நிகழ்ச்சியை பல்வேறு நாடுகளில் நடத்த திட்டமிட்ட சரண்,  அமெரிக்காவில் முதல் இசை  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்னிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடினார்.



இதனையடுத்து, தான் இசையமைத்த பாடலுக்கு தனது அனுமதி பெறாமல் எஸ்.பி.பி. பாடியதாக இளையராஜா தரப்பில் இருந்து  நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், இளையராஜாவின் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தாலோ,  அல்லது மேடைகளில் பாடினாலே அது காப்புரிமை மீறலாகும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த பிரச்சனையில் கடுப்பான சரண், எனது தந்தை கடந்த 5 வருடங்களில் இதுவரை சுமார் 40,000 பாடல்களை பாடியுள்ளார்.  இளையராஜா இசையமைக்க வருவதற்கு முன்பே தனது தந்தை பாடல்களை பாட ஆரம்பித்து விட்டார். மேலும் இளையராஜா  இசையில் தனது தந்தை சுமார் 2,000 பாடல்களை மட்டுமே பாடியுள்ளதாகவும், மீதமுள்ள 38,000 பாடல்களை வேறு  இசையமைப்பாளர்களின் இசையிலேயே பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை நடத்த  எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது.



மேலும் இளையராஜாவுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளார்.  அவரது பேச்சுக்கு மதிப்பளிக்கும் வகையில் எங்கள் தரப்பில் இருந்து எந்த தேவையற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது  என்றும் சரண் கூறினார். மாறாக அவர்கள் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ் மட்டும் அனுப்ப உள்ளோம் என்றார்.

Similar News