சினிமா

பிரபுதேவா பட போஸ்டரை வெளியிட்ட ஜாக்கிசான்

Published On 2016-07-30 10:04 GMT   |   Update On 2016-07-30 10:04 GMT
பிரபுதேவா பட போஸ்டரை ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் வெளியிட்டுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே படிப்போம்...
பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘தேவி’. இப்படத்தில் தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். திகில் நிறைந்த படமாக உருவாகிவரும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் வெளியிட்டுள்ளார். தேவி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சோனு சூத்தும், ஜாக்கிசானும் ஹாலிவுட் படமான ‘குங்பூ யோகா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அந்த நட்பு அடிப்படையில் ஜாக்கிசான் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக, ஜாக்கிசான் கமல் நடிப்பில் வெளிவந்த ‘தசவதாரம்’ படத்தின் ஆடியோவை வெளியிட்டு சிறப்பித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஜாக்கிசான்-சோனுசூத் நடித்து வரும் ‘குங்பூ யோகா’ படத்தில் ‘அனேகன்’ பட நாயகி அம்ரியா தஸ்தூரும் நடித்து வருகிறார். 

Similar News