தனுசு - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-05-20 04:09 GMT   |   Update On 2024-05-20 04:10 GMT

20.5.2024 முதல் 26.5.2024 வரை

திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நிறைவேறும் வாரம். ராசி அதிபதி குரு தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் குரு கடாட்சத்தால் தாராள தன வரவு உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வருமானத்தால் நிதி நிலை உயரும். பற்றாக்குறை பட்ஜெட் அகலும். 7, 10-ம் அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. வியாபாரிகள் சந்தை நிலவரத்திற்கு ஏற்றபடி அளவோடு கையிருப்பு வைத்து பலன் பெறுவார்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கல்வி தொடர்பான செயல்களில் முன்னேற்றம் ஏற்படும்.

அடமான நகைகள் மீண்டு வரும். மாதாந்திர சேமிப்பில் இருந்து புதிய நகைகள் வாங்குவீர்கள். திருமணமான இளம் பெண்கள் கருத்தரிப்பார்கள். பிள்ளைகளின் திருமணம் நிச்சயமாகும். ஆரோக்கிய குறைபாடு அகலும். மருத்துவச் செலவு குறையும். புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். கை மறதியாக வைத்த பொருட்கள், தொலைந்த ஆவணங்கள் கிடைக்கும். மறு திருமணத்திற்கு வரன் அமையும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் செய்ய நேரும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News