தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

கார்த்திகை மாத ராசிபலன்

Published On 2023-11-15 03:46 GMT   |   Update On 2023-11-15 03:48 GMT

எதிலும் புதுமை படைக்க வேண்டும் என்று நினைக்கும் தனுசு ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். எனவே ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. நிம்மதியை வரவழைத்துக்கொள்ளவும், நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகவும் முறையான வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. அதிக விரயங்களைச் சந்திக்கும் இம்மாதத்தில் அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

வக்ர குருவின் ஆதிக்கம்

மாதம் முழுவதும் மேஷ ராசியில் குரு பகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியானவர் குரு. சுகாதிபதியான குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. நினைத்தது நிறைவேறாமல் போகலாம். நேசித்தவர்களோடு யோசித்துப் பேசும் சூழ்நிலை உருவாகலாம். நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வந்தாலும் அவை நழுவிச் செல்லும் சூழ்நிலை உருவாகும்.

எதையும் திட்டமிட்டுச் செய்ய முடியவில்லை என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். தொழில் பங்குதாரர்கள் விலகிக்கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்துவர். குரு வக்ர நிவர்த்தியாகும் வரை பொறுமை தேவை.

துலாம்-சுக்ரன்

உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருப்பது நன்மை தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டி டும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், சம்பள உயர்வும் வரலாம். சொத்து விற் பனையால் ஆதாயம் உண்டு.

அதே நேரம் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. சொந்த வீட்டில் சுக்ரன் சஞ்சரித்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும் வந்து சேரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் பொறுப்புகள் மாற்றப்படலாம். பிறருக்குப் பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகையால் பிரச்சினைகள் ஏற்படும்.

தனுசு-புதன்

உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியிலேயே கார்த்திகை 14 முதல் சஞ்சரிக்கப்போகின்றார். எனவே கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வியாபாரம் தொழிலில் உங்களைப் பற்றி விமர்சனம் செய்தவர்கள் விலகிச் செல்வர். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும்.

Similar News