ஆன்மிக களஞ்சியம்

பகல்பத்து இராப்பத்து!

Published On 2023-12-21 11:47 GMT   |   Update On 2023-12-21 11:47 GMT
  • விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் பூஜை முறைகளை பாஞ்சராத்ரம், வைகானஸம் என்று இரண்டாகச் சொல்வர்.
  • அடுத்த பத்து நாட்களை “மோகக்ஷாத்ஸவம்” என்பர்.

விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் பூஜை முறைகளை பாஞ்சராத்ரம், வைகானஸம் என்று இரண்டாகச் சொல்வர்.

அவற்றில் பாஞ்சராத்ர ஆகமத்தில், ப்ரசின ஸம்ஹிதையில், மார்கழி மாத சுக்லபட்ச பிரதமை தொடங்கி இருபது நாட்களுக்கு பகவானுக்கு உற்சவம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதன்படி, மார்கழி மாத சுக்லபட்ச பதினோராம் நாள், வைகுண்ட ஏகாதசி.

இதற்கு முந்தைய பத்து நாட்களை பகல் பத்து என்றும், அடுத்த பத்து நாட்களை இராப்பத்து என்று, கொண்டாடுகிறார்கள்.

பகல் பத்து என்ற பத்து நாட்களைத்தான் அத்யயன உத்ஸவம் என்கிறார்கள்.

இந்தப் பத்து நாட்களிலும் பெருமாளின் முன்பாக பன்னிரு ஆழ்வார்களும் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதுமாக பாடப்படும்.

அடுத்த பத்து நாட்களை "மோகக்ஷாத்ஸவம்" என்பர்.

இந்த பகல் பத்து உத்ஸவத்துக்கு முதல் நாள் திருமங்கையாழ்வார் அருளிய திருநெடுந்தாண்டகம் பாடப்படும்.

ஏகாதசி உற்சவத்துக்கு கட்டியங் கூறுவது போல் அமைந்த திருநாள் இது.

இதைத் தொடர்ந்து நடப்பது தான் புகழ் பெற்ற அரையர் சேவை.

Tags:    

Similar News