ஆன்மிக களஞ்சியம்

லட்சுமி நரசிம்மர் சன்னதி

Published On 2023-12-27 12:38 GMT   |   Update On 2023-12-27 12:38 GMT
  • உற்சவமூர்த்தி சாந்த நரசிம்மர் (லட்சுமி நரசிம்மர்) ஆவார்.
  • இவருக்கு உகந்த நாட்கள் சுவாதி நட்சத்திரம்.

இந்த சன்னதி அலங்கார மண்டபத்தில் மேற்கு நோக்கி ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு நேர் எதிரே மூல நரசிம்மர் ஸ்ரீ அமிர்தவல்லி தாயாருடன் எழுந்தருளி உள்ளார்.

உற்சவமூர்த்தி சாந்த நரசிம்மர் (லட்சுமி நரசிம்மர்) ஆவார்.

அதே சமயம் மூலவர் உக்கிரமூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

அவருடைய தோற்றத்திற்கும் அமைப்பிற்கும் பொருந்துவது போல கண்கள் சிவக்க காட்சி அளிக்கிறார்.

இவருடைய கண்கள் தீப ஆர்த்தியின் போது இயற்கையாக சிம்மத்தின் கண்கள் ஒளியை உமிழ்வது போல தோற்றம் அளிப்பது இங்கு மிகச் சிறந்த விசேஷம் ஆகும்.

உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பில்லி சூனியம் இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம்

(48 நாட்கள்) தரிசித்தால் அவர்கள் குறைகள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இவருக்கு உகந்த நாட்கள் சுவாதி நட்சத்திரம்.

வெள்ளி, ஞாயிறு, நரசிம்மர் ஜெயந்தி அன்று ஸ்தம்பமாக (தூண்) அலங்காரம் செய்து, உபவாசம் விரதம் இருந்து

நரசிம்மர் வேடம் தரித்து பிரகலாதனையும், இரணியக சிபுவையும் உருவகப்படுத்தி சுமார் ஒரு மணி நேரம் மாலை

நேரத்தில் நடைபெறும் வைபவம் குறிப்பிடத்தக்கது ஆகும்.

(திருக்குறுங்குடியில் கைசிக துவாதசியில் நடைபெறும் விழா போல் இந்த விழாவும் நடைபெறுகிறது)

மன அமைதி இழந்த, மனநிலை சரி இல்லாதவர்களுக்கு இந்த சன்னதியில் சங்கு தீர்த்தம் தெளிப்பது முக்கிய விசேஷம் ஆகும்.

இதனுடைய பலனை உடனடியாக அறிய முடியும்.

அந்த அளவுக்கு வரப்பிரசாதியாக லட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

Tags:    

Similar News