தொழில்நுட்பம்

இரண்டு வேரியண்ட்களில் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2019-05-02 07:19 GMT   |   Update On 2019-05-02 07:19 GMT
ரியல்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் என இருவித வேரியண்ட்களில் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. #Realme



ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஃபிளாக்‌ஷிப் ரகத்தில் உருவாகும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்களுடன் இருவித வேரியண்ட்களில் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இவை முறையே ரியல்மி X மற்றும் ரியல்மி X ப்ரோ என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.

ரியல்மி X மாடலில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸரும், ரியல்மி X ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. 

முன்னதாக பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுவது உறுதியாகியிருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி X மற்றும் ரியல்மி X ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.



அதன்படி ரியல்மி X ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்படலாம். 

மெமரியை பொருத்தவரை 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என ரியல்மி X மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. முதற்கட்டமாக ரியல்மி X ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ரியல்மி X ப்ரோ சிறப்பம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றபடி ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் என்றே தெரிகிறது.

புகைப்படம் நன்றி: TENAA | I_Leak_VN 
Tags:    

Similar News