தொழில்நுட்பம்

ரூ.169 விலையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் தேசிய அழைப்புகள் வழங்கும் ஏர்டெல்

Published On 2018-12-20 04:37 GMT   |   Update On 2018-12-20 04:37 GMT
பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் அறிவித்து இருக்கும் ரூ.169 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் தேசிய அழைப்புகள் வழங்கப்படுகிறது. #Airtel #offers



பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.169 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே விலையில் வோடபோன் நிறுவனமும் தனது பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்தது.

ஏர்டெல் ரூ.169 பிரீபெயிட் சலுகையின் பலன்களை பார்க்கும் போது, பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் தேசிய ரோமிங், தினமும் 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 28 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை நாடு முழுக்க ஏர்டெல் பிரீபெயிட் சலுகையை பயன்படுத்தி வரும் அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வோடபோன் வழங்கும் ரூ.169 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையிலும் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

எனினும் தினசரி டேட்டா அளவை கடந்ததும் ஒரு எம்.பி. டேட்டாவிற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்ததும் வாய்ஸ் கால் செய்ய நொடிக்கு 1.2 பைசா அல்லது நிமிடத்திற்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 

ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. இந்த சலுகையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News