தொழில்நுட்பம்

ஒரே மாதத்தில் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்த சியோமி

Published On 2018-11-13 04:41 GMT   |   Update On 2018-11-13 04:41 GMT
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் ஒரே மாதத்தில் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்திருக்கிறது. #XiaomiSuperSalesDay



சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற பண்டிகை கால விற்பனையில் மட்டும் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இவற்றில் சுமார் 60,00,000க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள், சுமார் 4,00,000க்கும் அதிகமான எம்.ஐ. டி.வி. மாடல்கள் மற்றும் சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான இதர சாதனங்கள் அடங்கும்.

அக்டோபர் 9ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதி வரை Mi.com, அமேசான், பிளிப்கார்ட், எம்.ஐ. ஹோம் ஸ்டோர் மற்றும் இந்தியா முழுக்க நடைபெற்ற ஆஃப்லைன் வர்த்தகத்தில் இத்தகைய விற்பனையை சியோமி பதிவு செய்திருக்கிறது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன், டி.வி. அணியக்கூடிய சாதனங்கள், பவர் பேங்க், ஹோம் செக்யூரிட்டி, ஏர் பியூரிஃபையர் மற்றும் பல்வேறு இதர பிரிவுகளில் சியோமி முதலிடம் பிடித்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



விற்பனை விவரம்:

– பிளிப்கார்ட் பண்டிகை கால விற்பனையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 5 ப்ரோ இருக்கிறது.

– அமேசான் தளத்தில் 30 நாட்கள் பண்டிகை கால விற்பனையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ரெட்மி 6ஏ இருக்கிறது.

- ஸ்மார்ட்போன் பிரிவில் முதலிடம்.

– அதிகம் விற்பனையான டி.வி. பிரிவில் எம்.ஐ. எல்.இ.டி. டி.வி. மாடல்கள் முதலிடம்.

– அணியக்கூடிய சாதனங்களில் அதிகம் விற்பனையான மாடலாக எம்.ஐ. பேன்ட் 3 முதலிடம் பிடித்திருக்கிறது.

– பவர்பேங்க் பிரிவில் எம்.ஐ. பவர் பேங்க் முதலிடம்.

– அமேசான் வலைதளத்தில் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் சியோமி மாடல்கள்.

– கடந்த ஆண்டு அனைத்து தளங்களில் நடைபெற்ற விற்பனையை விட எம்.ஐ. ஏர் பியூரிஃபையர் 2எஸ் 4.5 மடங்கு அதிகமாக விற்பனையாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பண்டிகை கால விற்பனையில் சியோமி நிறுவனம் சுமார் 40,00,000க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டு சிறப்பு விற்பனையில் சுமார் 60,00,000க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. 

மேலும் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் சியோமி பிடித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. சியோமிக்கு அடுத்து இரண்டாவது இடத்திற்கு சாம்சங் தள்ளப்பட்டுள்ளது.
Tags:    

Similar News