செய்திகள்

இந்திய ஓபன் குத்துச்சண்டை - மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

Published On 2019-05-20 20:55 GMT   |   Update On 2019-05-20 20:55 GMT
இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
கவுகாத்தி:

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. ஆண்களுக்கு 10 எடைப்பிரிவிலும், பெண்களுக்கு 8 எடைப்பிரிவிலும் நடைபெறும் இந்த போட்டியில் 6 நாடுகளை சேர்ந்த 200 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் பிரிஜேஷ் யாதவ், சஞ்சய் (இருவரும் 81 கிலோ), நமன் தன்வார், சன்ஜீத் (இருவரும் 91 கிலோ), சதீஷ்குமார், அதுல் தாகூர் (இருவரும் 91 கிலோவுக்கு மேல்) ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் லவ்லினா போர்கோஹைன், அஞ்சலி (இருவரும் 69 கிலோ), பாக்யபாதி கசாரி, சவீட்டி போரா (இருவரும் 75 கிலோ) அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர். 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேறினார். அவர் அரைஇறுதியில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தெலுங்கானா வீராங்கனை நிஹாத் ஜரீனை சந்திக்கிறார்.
Tags:    

Similar News