செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி - இம்ரான்கான் சந்திப்பு இல்லை

Published On 2019-06-06 20:37 GMT   |   Update On 2019-06-06 20:37 GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், பிரதமர் இம்ரான்கானும் சந்திப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பி‌‌ஷ்கெக்கில் வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட பல தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டுக்கு இடையே இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இதுபற்றி வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீ‌‌ஷ்குமாரிடம் கேட்டபோது, ‘‘எனக்கு தெரிந்தவரை நமது பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் சந்திப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை’’ என்றார்.
Tags:    

Similar News