search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு"

    • ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • இந்த மாநாட்டின் இடையே ரஷியா, துருக்கி அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார்.

    இதில், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    மாநாட்டின்போது மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் எர்டோகன் உள்பட பலரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை முடித்துக் கொண்டு உஸ்பெகிஸ்தான் சமர்கண்ட் நகரில் இருந்து நேற்று இரவு தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார்.

    • உக்ரைன் போர் குறித்து ரஷிய அதிபரிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
    • உக்ரைன் மீதான படையெடுப்புக்காக ரஷியாவை இந்தியா இதுவரை விமர்சிக்கவில்லை.

    தாஷ்கண்ட்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

    இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவும் ரஷியாவும் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்றைய சகாப்தம் போருக்கானது அல்ல. அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியா - ரஷியா இரு தரப்பு விஷயங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாம் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்காக உதவிய ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்" என்றார்.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு புதினும் மோடியும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த புதின், 'உக்ரைன் மோதல் விஷயத்தில் உங்களின் நிலைப்பாட்டை நான் அறிவேன். போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்' என்றார்.

    உக்ரைன் மீதான படையெடுப்புக்காக ரஷியாவை இந்தியா இதுவரை விமர்சிக்கவோ, கண்டனம் தெரிவிக்கவோ இல்லை. பேச்சுவார்த்தை மூலம் சிக்கலை தீர்க்கவேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தியாவும் ரஷியாவும் பனிப்போர் காலத்திலிருந்தே நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளன. அத்துடன், ரஷியா இந்தியாவிற்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் முக்கிய நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்குகிறது.
    • கொரோனாவால் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு கடந்த 2 ஆண்டாக நடக்கவில்லை.

    தாஷ்கண்ட்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019-ம் ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன்பிறகு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை.

    ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரைச் சென்றடைந்தார்.

    இந்த மாநாட்டின் போது மோடி உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்.

    உக்ரைனில் ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கிய பிறகு, பிரதமர் மோடி மற்றும் புதின் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டு அரங்கில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசைனிடம் சிரித்தபடி கையை குலுக்கி பேசினார். #SCOSummit2018 #PMModi #SCO
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், இன்று மாநாட்டின் அமர்வு தொடங்கியது. இதில், உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இடைக்கால அரசு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு அதிபர் மம்னூன் உசைன் மாநாட்டில் கலந்து கொண்டார்.

    மாநாடு முடிந்த பின்னர் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சமையத்தில் மம்னூன் உசைன் - மோடி இருவரும் சிரித்தபடி கையை குலுக்கினர். பின்னர், இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். இதனை, சீன அதிபர் ஜி ஜின்பிங் அருகில் நின்று சிரித்துக்கொண்டு பார்த்தார். 

    பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இரு தரப்பில் இருந்தும் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    பயங்கரவாதத்தின் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் ஒரு துரதிர்ஷ்டவசமான உதாரணம் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். #SCOSummit2018 #PMModi
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், இன்று மாநாட்டின் அமர்வு தொடங்கியது. இதில், உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    பயங்கரவாதத்தின் விளைவு என்ன? என்பதற்கு ஆப்கானிஸ்தான் துரதிர்ஷ்டவசமான உதாரணம். அங்கு அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அதிபர் அஷ்ரப் ஞானி எடுத்து வரும் துணிச்சலான முடிவுக்கு பிராந்திய நாடுகள் மதிப்பளிக்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் இருந்து வெறும் 6 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். இதனை எளிதாக இரட்டிப்பாக மாற்ற இயலும்.

    ஷாங்காய் அமைப்பின் உணவு மற்றும் புத்த கலாச்சார மாநாட்டை நடத்த இந்தியா தயாராக உள்ளது. பிராந்திய நாடுகளுடன் தொடர்பு எல்லா வழியிலும் நடந்து வருகிறது. பிராந்திய நாடுகளை ஒன்றாக இணைப்பது இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    ×