செய்திகள்

இந்தியா-அமெரிக்கா விமானப்படைகள் நாளை முதல் 12 நாள் கூட்டுப் பயிற்சி

Published On 2018-12-02 10:02 GMT   |   Update On 2018-12-02 10:02 GMT
அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படைகள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நாளை முதல் 12 நாட்களுக்கு கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. #Indiaairforce #USairforce #IndiaUSairforces
புதுடெல்லி:

அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் நாளை முதல் 12 நாட்களுக்குமேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள காலய்குன்டா மற்றும் பனாகர் விமானப்படைத் தளங்களில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

இருநாடுகளுக்கு இடையில் நான்காவது முறையாக நடைபெறும் இந்த பயிற்சிக்காக அமெரிக்காவில் இருந்து F15 C/D and C-130 ரகப்போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன.

இந்தியாவின் சார்பில் Su-30 MKI, Jaguar, Mirage 2000, C-130J உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்கும் இந்த கூட்டுப்போர் பயிற்சிக்கு எக்ஸ் கோப் இந்தியா (Ex Cope India-18) என பெயரிடப்பட்டுள்ளது. #Indiaairforce #USairforce #IndiaUSairforces #CopeIndia #ExCopeIndia18
Tags:    

Similar News