செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 1,900 கனஅடியாக உயர்வு

Published On 2019-06-01 09:12 GMT   |   Update On 2019-06-01 09:12 GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 1,900 கனஅடியாக உயர்ந்தது.
பென்னாகரம்:

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் 1,300 கனஅடியாக அதிகரிக்க தொடங்கிய நீர்வரத்து நேற்று 1,700 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து 1,900 கனஅடியாக உயர்ந்தது.

கோடை விடுமுறை முடிவடைய உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. இன்று காலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அவர்கள் மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். படகு சவாரி செய்தும் ஒகேனக்கல்லின் இயற்கை அழகை ரசித்தனர்.

Tags:    

Similar News